“தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது வருகின்ற 19.05.2023 அன்று நடைபெறவுள்ளது. இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு மேலாளர், கணினி இயக்குபவர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், கணக்காளர், காசாளர் , தட்டச்சர், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டென்டு போன்றபணிகளுக்கு தேர்வுசெய்யவுள்ளனர். 10-ம் வகுப்பு தேர்ச்சி/தேர்ச்சி பெறாதவர், 12-ம் வகுப்பு, பட்டயப்படிப்பு(Diploma), பட்டப்படிப்பு(Degree), ஐ.டி.ஐ (தொழிற்பழகுநர்) பயிற்சி மற்றும் கணினியியல் (Java, Tally) முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித் தகுதி உள்ளோரும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் இலவச திறன் பயிற்சிகளில் சேர பதிவும் ஆலோசனையும் வழங்கப்படும். இம்முகாமில் பங்குபெறும் வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இம்முகாமானது முற்றிலும் இலவசமானது. மேலும், இவ்வேலைவாய்ப்பு முகாமின் மூலம் பணிவாய்ப்பு பெற்றவரது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
 
Organiser
District Employment and Career Guidance Centre - Namakkal
Date
19/05/2023 to 19/05/2023
Timings
09:00 AM to 02:00 PM
Location
Namakkal
Address
Old Court Campus,,
Mohanur road,
Namakkal,
Landmark: BSNL OFFICE OPPOSITE
S.No Contact Person Designation/Role Email ID Mobile No
1 DISTRICT EMPLOYMENT OFFICE JUNIOR ASSISTANT jobfairnkl2022@gmail.com 9159662362
Participating Employers in this Job Fair.
nicola educational and Research Institute
Location: Chennai
Job Fair - Posted Jobs
S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 nicola educational and Research Institute SSLC - Any Chennai 100 15,000 - 25,000