திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதம் 16.08.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் திருப்பத்தூரை சேர்ந்த முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் +2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவர்கள் என அனைத்து வித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வாயிலாக நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநர்கள் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கவுள்ள தனியார் நிறுவனங்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளன. எனவே, தனியார்துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும், இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் இரத்து செய்யப்படமாட்டாது என்றும், மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04179-222033 வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 |
Sruthi Total HR Solution Private Limited |
Under Graduate - Any | Chennai | 100 | 15,000 - 25,000 |
2 |
Sruthi Total HR Solution Private Limited |
Diploma - Diploma In Engineering | Chennai | 50 | 15,000 - 25,000 |
3 |
Sruthi Total HR Solution Private Limited |
Welding Assistant | Chennai | 10 | 15,000 - 25,000 |
4 |
THE INNOVATORS GROUP |
Post Graduate - Any | Chennai | 17 | 15,000 - 25,000 |
5 |
THE INNOVATORS GROUP |
Under Graduate - Any | Chennai | 13 | 15,000 - 25,000 |
6 |
Reliance Projects and Property Management |
Field Sales Executive | Thiruppathur | 20 | 15,000 - 25,000 |
7 |
TRR Automotive |
Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING | Thiruppathur | 40 | 10,000 - 15,000 |
8 |
APOLLO HOSPITALS ENTERPRISE LTD PHARMACY DIVISION |
CERT. IN MEDICAL / PARA MEDICAL - CERT. IN MEDICAL / PARA MEDICAL - NURSING | Thiruppathur | 5 | 10,000 - 15,000 |
9 |
YADHAV COMMON SERVICE CENTRE |
COMPUTER OPERATOR | Thiruppathur | 50 | 10,000 - 15,000 |
10 |
SREE MUGAMBIGAI GLAZING PVT LTD |
Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING | Thiruppathur | 5 | 10,000 - 15,000 |
11 |
CuManS Pvt Ltd |
Line Assembler - Telecom Products | Chennai | 200 | 15,000 - 25,000 |
12 |
Teamlease Education and foundation |
Trainee | Chennai | 50 | 15,000 - 25,000 |
13 |
AGTRS IDART PRIVATE LIMITED |
Business Correspondent & Business Facilitator | Coimbatore | 30 | 15,000 - 25,000 |
14 |
Geekayhuman resources pvt ltd |
HSC - Any | Chennai | 1500 | 15,000 - 25,000 |
15 |
SRI KRISHNA SILKS |
Diploma - Diploma Others - OTHERS | Thiruppathur | 10 | 10,000 - 15,000 |
16 |
HBI CONFIDENT GROUP HIMS |
Under Graduate - Any | Tiruvannamalai | 50 | 10,000 - 15,000 |
17 |
Blue ocean |
SSLC - Any | Chennai | 100 | 15,000 - 25,000 |
18 |
Muthoot Finance Pvt Ltd |
Business Correspondent & Business Facilitator | Thiruppathur | 100 | 10,000 - 15,000 |
19 |
Muthoot Finance Pvt Ltd |
Telecaller | Thiruppathur | 50 | 10,000 - 15,000 |